ஆற்றுபாலத்தில் அம்போவென மனித தலை.. நடுநடுங்கவிடும் ராஜபாளையம் கொலை பின்னணி | Rajapalayam Murder Case

x

ராஜபாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த நபரின் தலை முடங்கியார் ஆற்று பாலத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியர் ஆற்றுப் பாலத்தின் மீது ஆண் தலை ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த தலையை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்டது பூவையா எனவும் அவரை காணவில்லை என உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 8 ஆம் தேதி முதல் தேடி வந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுந்தரராஜபுரம் வனப்பகுதியில் கிடந்த பூவையாவின் உடலையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்