வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு.. கயிற்றை பிடித்து கடக்கும் காட்சி

x

வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு.. கயிற்றை பிடித்து கடக்கும் காட்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குச் சென்ற 10-க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மறுகரைக்குச் சென்ற பிறகு காட்டாற்று வெள்ளம் வந்ததால் திரும்பி வரமுடியாமல் தவித்து வந்த 50-க்கும் மேற்பட்டோரை தீயனைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து அந்த பகுதிக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வனத்துறை சீருடையில் இருந்த சிலர், பிரதிபலனை எதிர்பார்த்து சொகுசு காரில் வந்த 10-க்கும் மேற்பட்டோரை தடை செய்யப்பட்ட பகுதிக்கு அனுமதித்தனர்.

அந்த பகுதியில் உள்ள ஓடையில் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திரும்பி வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, செய்தியாளர்களின் உதவியோடு வருவாய்த் துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுகரையில் சிக்கிக் கொண்ட 10-க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்