குளம் போல் மாறிய சென்னை ஏர்போர்ட் - 30 நிமிடத்தில் காணாமல் போன மழைநீர்
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலைய வளாகத்தில், கனமழை காரணமாக மழைநீர் சூழ்ந்தது. மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் வெளியேறும் பகுதியில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து விமான நிலைய பராமரிப்பு ஊழியர்கள், சுமார் 30 நிமிடங்களில் மழைநீர் கால்வாயில் இருந்த அடைப்பை சரி செய்தனர். இதையடுத்து விமான நிலைய வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீர், கால்வாய் வழியாக வெளியேறியது.
Next Story