ஜூன் 10 முதல் 55 கி.மீ வேக சூறாவளி... சொன்னது போலவே இன்று சென்னையில் ஆட்டம் ஆரம்பம்

x

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் தேவாலாவில்

அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சோலையார், கூடலூர், வால்பாறையில் 4 சென்டி மீட்டரும்,

அவலாஞ்சியில் 3 சென்டி மீட்டரும் பதிவாகியுள்ளன.

அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 36.7 டிகிரி

செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. வட தமிழக உள்

மாவட்டங்களின் 32 முதல் 36 டிகிரி செல்சியஸும்,

தென் தமிழக உள் மாவட்டங்களில் 35 முதல் 37 டிக்ரி°

செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளன. அடுத்த 5

தினங்களில், தமிழகம், மற்றும் புதுவையில், ஒருசில

இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி°

செல்சியஸ் அளவுக்கு உயரும் என்று சென்னை வானிலை

ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த நான்கு நாட்களில்,

மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில்,

மணிக்கு 55 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில்,

சூறாவளிக்காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள்

இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று

அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்