குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - வீடுகளுக்குள் நீர் புகும் அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பட்டிபுலம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா தெருவில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால், அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மழை தொடர்ந்தால் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Next Story