சிக்கி தவிக்கிறோம்.. விடிவு கிடைக்குமா? சிறு மழைக்கே மாறிய காட்சிகள் ...குமுறும் வடசென்னை மக்கள்

x

எப்போதும் நெரிசலால் சிக்கித் தவிக்கும் வடசென்னை மக்களுக்கு தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையோடு கட்டப்பட்டு வந்த வியாசர்பாடி மேம்பால பணிகள் மெதுவாக நடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

எந்த நேரமும் பரபரப்பின் உச்சமாகவே இருக்கும் பகுதிகளில் ஒன்று வடசென்னை... அதிலும் மழைக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம்.. பெரும்பாலான சுரங்கப்பாதைகள் ஏதோ தண்ணீர் கொட்டி வைத்திருக்கும் பேரல் போலவே காட்சி தரும்..

சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்ற பேருந்து தண்ணீரில் சிக்கிக் கொண்ட செய்தியை ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் நிச்சயம் பார்த்திருப்போம். அப்படி ஒரு இடம் தான் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை..

வடசென்னையை சென்னை நகருக்குள் இணைக்கும் முக்கிய சாலைகளில் டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையும் ஒன்று. இந்த சாலையில் வியாசர்பாடி கணேசபுரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து சென்றால் தான் புளியந்தோப்பு , புரசைவாக்கம் பகுதிகளை கடந்து சென்னை நகருக்குள் செல்ல முடியும்.

இந்த சுரங்கப்பாதை குறுகிய சாலையாக உள்ள காரணத்தால் காலை, மாலை என நெருக்கடியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

மழை காலங்களில் நிலைமையை சொல்லவே வேண்டாம்... வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி சென்னை நகருக்குள் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காண கணேசபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு சுமார் 142 கோடி மதிப்பீட்டில் , 680 மீட்டர் நீலமும், 15.2 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

மேம்பாலம் கட்டும் பணிக்காக டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையானது ஒருவழியாக மாற்றப்பட்டது. அந்த வகையில் வியாசர்பாடியில் இருந்து புரசைவாக்கம் செல்லும் மார்க்கத்தில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், புரசைவாக்கத்தில் இருந்து வியாசர்பாடி செல்லும் வாகனங்கள் பெரம்பூர் அல்லது பேசின் பாலம் வழியாக சுற்றி செல்கின்றன.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்