#JUSTIN | கருணை காட்டிய மழை.. இயல்பு நிலைக்கு திரும்பும் தென்காசி மக்கள்
தென்காசியில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த தொடர்மழை... இன்று காலை முதல் மழை இல்லாததால் இயல்பு நிலைக்கு திரும்பும் மக்கள்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவியதன் காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் சாலைகளில் நீர் தேக்கம் இன்றி முற்றிலும் வறண்டது.
இதனால் இப்போது பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தொடங்கியுள்ளதால் முக்கிய வீதிகளில் மக்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது மேலும் தென்காசி நகர் பகுதியில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.