தமிழ்நாட்டையே கூலாக்கிய திடீர் மழை.. சட்டென மாறிய கிளைமேட் - குஷியில் மக்கள்

x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, நசரத் பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் திடீரென கனமழை பெய்ததால், குளிர்ந்த சூழல் நிலவியது.

அதேபோல், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அதனை சுற்றியுள்ள காளப்பூர், எஸ் வி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.


Next Story

மேலும் செய்திகள்