மழை வெள்ள நிவாரணத் தொகை..! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட 3 தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன. பாதிப்புகளை பொறுத்து ஆறாயிரம், ஆயிரம் ரூபாய் என பிரித்து வழங்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் 2 மணி வரை நெல்லை மாவட்டத்தில், 92 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் நிவாரணத்தொகை வழங்கும் பணிகள், இன்று மாலை வரை மட்டுமே நடைபெறும் என்றும், டோக்கன் பெற்ற மீதமுள்ளவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் ரேஷன் கடைகளுக்கு சென்று நிவாரணத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்
Next Story