ரெய்டில் சிக்கிய KGF விக்கி - அடித்து நொறுக்கப்பட்ட எதிர் கடை - சென்னையில் பரபரப்பு
சென்னை வண்ணாரப்பேட்டையில், கடையில் வேலை பார்த்து வந்த சிறார்கள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் விக்கி என்பவருக்கு சொந்தமான கடையில், குழந்தை தொழிலாளர்கள் தடுப்புப்பிரிவு மற்றும் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அங்கு வேலை பார்த்த 16 வயதுடைய 3 சிறுவர்களை மீட்டு, சென்னை சூரியநாராயண சாலையில் உள்ள சிறார் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் சிறுவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிடிபட்ட 16 வயது சிறுவர்களில் ஒருவன், தங்களை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்தாக கூறி, தான் வேலை செய்த கடைக்கு எதிரில் உள்ள கடைக்குச் சென்று அங்கிருந்த பொருட்களை தள்ளிவிட்டுள்ளான். அதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
Next Story