மேடையில் திடீரென - எமோஷனலாக பேசிய சோனியா காந்தி

x

ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரச்சாரத்தில் பேசிய சோனியா காந்தி, ரேபரேலி தொகுதியில் 20 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்ற மக்கள் வாய்ப்பு அளித்தது, வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்து என்றார். ரேபரேலி தொகுதி தனது குடும்பம் என்றால், அமேதி தொகுதி தனது வீடு போன்றது என்றும் குறிப்பிட்டார். தனது குடும்பத்தின் ஆணி வேர் ரேபரேலி தொகுதியின் மண்ணோடு 100 ஆண்டுகளாக பின்னி பிணைந்துள்ளதாக தெரிவித்த சோனியா காந்தி, அந்த உறவு கங்கை அன்னையை விட புனிதமானது என உருக்கமாக தெரிவித்தார். தன்னுடைய மகனை ரேபரேலி மக்களிடம் ஒப்படைப்பதாகவும், தன்னை ஏற்றுக்கொண்டது ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்த சோனியா காந்தி, ஒருபோதும் ராகுல் காந்தி ஏமாற்ற மாட்டார் என்று உருக்கத்துடன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்