கட்சிக்குள்ளே கட்டம் கட்டப்படும் கார்த்தி சிதம்பரம்.. என்ன முடிவெடுப்பார் ராகுல்?

x

சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர். ராமசாமி தலைமையிலான நிர்வாகிகள், கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அவர்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்