முதியவரின் உள்ளாடையை இழுத்து பணம் பறிப்பு.. போலீசில் வசமாக சிக்கிய சிறுவர்கள்

x

வேலூர் அருகே முதியவரிடம் பணம் பறித்த 2 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள டீக்கடையில், இரவு நேர காவலாளியாக உள்ளவர் ராமமூர்த்தி. சில நாட்களுக்கு முன்னர் இவரிடம், 3 பேர் கும்பல் ஒன்று பணம் பறித்து சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பண பறிப்பில் ஈடுபட்ட சிறார்கள் இருவரை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்