திடீர் என்ட்ரி..பரபரப்பான ஸ்கூல்- "கதை சொல்லுறியா" -ஆசிரியராக மாறிய ஆட்சியர்

x

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள அரசு உயர் துவக்க பள்ளியில் ஆட்சியர் அருணா திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறை, கழிவறைகளை ஆய்வு செய்த ஆட்சியர் மாணவர்களுக்காக வழங்கப்படும் சத்துணவை உட்கொண்டு அது தரமானதாக வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று ஆட்சியர் அருணா வகுப்பெடுத்ததுடன், கேள்வி கேட்டு பதில் சொன்ன மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தார். அப்போது, மாணவர்கள், நூலகம் வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், உடனடியாக நூலகம் அமைக்க நடவடிக்கை எடுத்தார். பள்ளி வளாகத்தில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்