`மதம் மாற்ற முயற்சி' - சாலை மறியலில் குதித்த இந்து முன்னணியினர்

x

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பாக, மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இரண்டு பேரைப் பிடித்து அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அருணா இதுகுறித்து விசாரித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்