பிரியாணி சாப்பிட முந்திக் கொண்டு ஓடிய கட்சியினர் - புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடியதில் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். குளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொது உறுப்பினர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. பந்திக்கு முந்துவதற்காக ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு சென்றதில் கீழே விழுந்து சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவர்களை நிர்வாகிகள் கட்டுப்படுத்தி அனைவரும் சாப்பிடுவதற்கு வழிவகை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்