போதை பொருள் கடத்தலில் தொடர்பு... திமுக நிர்வாகி மீது பாய்ந்தது நடவடிக்கை... துரைமுருகன் அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக விவசாய
அணி அமைப்பாளர் சுந்தர பாண்டியனின் வாகன
ஓட்டுனர் கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு
விழுப்புரம் அருகே போதை பொருள் கடத்திய வழக்கில்
காவல்துறையால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் விசாரணையில் இந்த வழக்கில் சுந்தர பாண்டியனுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கட்சி மேலிடம் சுந்தர பாண்டியனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை
வாயிலாக தெரிவித்துள்ளார்.
Next Story