கர்ப்பிணி பெண் உயிரிழப்பு - அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை

x

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு மற்றும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிதல் புகார்களையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் அங்கு அதிரடி ஆய்வு நடத்தினர். மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ துறை இணை இயக்குனர் ஸ்ரீ பிரியா தேன்மொழி, அம்மருத்துவமனையில் கலைமணி என்ற கர்ப்பிணி பெண் கருக்கலைக்கும் போது உயிரிழந்தது தொடர்பாக மருத்துவ சிகிச்சை விவரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்