அரசு பள்ளி விழாவில் திமுகவினர் வாக்குவாதம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பேனரில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பெயர் இடம்பெறவில்லை எனக் கூறி, திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். மேலும் அந்த பேனரில் ஒன்றியக் குழுத் தலைவரின் பெயர், வேறு வண்ணத்தில் இருப்பதாக கூறிய அவர்கள், தங்களுக்கு அழைப்பு விடுக்காமல் எப்படி விழா நடத்துகிறீர்கள் என்று பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.
Next Story