அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்... விசாரணையில் வெளியான உண்மை..புதுக்கோட்டையில் அதிர்ச்சி
அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்...விசாரணையில் வெளியான உண்மை..புதுக்கோட்டையில் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஆர்டிஓ விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
கறம்பக்குடி புதுக்குளத்தில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திய போது, வடக்கு தெருவில் கடந்த 5ஆம் தேதி காணாமல் போன விஸ்வநாதன் என்பது தெரிய வந்தது. உறவினர்களை அழைத்து விசாரித்த போது, விஸ்வநாதன் என்பது உறுதி செய்யப்பட்டது. விஸ்வநாதனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள், ஆர்டிஓ விசாரணை செய்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை உடலை எடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். போலிசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.