சிறுமிக்கு ஆபாச வீடியோ - மதுரை பிரபல யூடியூபர் மகன் அதிரடி கைது
புதுச்சேரியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவரின்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அறிமுகம் இல்லாத புதிய
நபரிடம் இருந்து மெசோஜ் வந்தது. பிறகு அந்த மாணவியும், மர்ம நபரும் மெசேஜ் மற்றும் வீடியோக்கள் அனுப்புவது மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்கள் பழகிய 15 நாட்களில், அந்த மர்ம நபர், மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்பு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அவருடைய அந்தரங்க
வீடியோக்களை அனுப்பி, மாணவியை நிர்வணமாக வீடியோவில் தோன்றுமாறு மிரட்டி உள்ளார். இதை அறிந்த மாணவியில் தாய் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், மாணவியை மிரட்டியது மதுரையைச் சேர்ந்த பிரபல யூடியூப்
பிரபலமான சிக்கா, சுமியின் மகனான அஷ்ரப் அலி என தெரிய வந்தது. அஷ்ரப் அலி மீது போக்சோ, மிரட்டல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.