இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ.. - அதிர்ந்த டாக்டர்கள்..

x

புதுச்சேரியில், 17 வயது இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த ஒன்றரை கிலோ தலை முடியை, ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். கடந்த சில தினங்களுக்கு முன் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்ததில், வயிற்றினுள் முடிப்பந்து இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் இளம்பெண்ணுக்கு முடியை விழுங்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சுமார் 90 நிமிடம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், பெண்ணின் வயிற்றிலிருந்த முடிப்பந்தை அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்