ரேஷன் கடைகளை திறக்கக்கோரி சாலை மறியல் - புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மூடப்பட்ட ரேஷன் கடைகளை திறந்து, பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருட்களை வழங்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
Next Story