சென்னை ஐகோர்ட்டில் புதுவை அமைச்சர் தொடர்ந்த வழக்கு.. நீதிபதி போட்ட உத்தரவு

x

புதுச்சேரியில், வீட்டு மனைப்பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, அம்மாநில பாஜக அமைச்சர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புதுச்சேரி மாநில குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், புதுவை கூடப்பாக்கம் கிராமத்தில், 2006ம் ஆண்டு வீடு இல்லாத 102 பேருக்கு வீட்டு மனைகள் வழங்க, நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதில், உண்மையானவர்கள் எல்லை என ஆரோக்கியதாஸ் என்பவர் தொடர்ந்த தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக உள்ள இந்த தடையை நீக்கி, புதிய குழு அமைத்து, பயனாளிகளை இறுதி செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு, இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாக தெரிவித்தார். புதுச்சேரி அரசை எதிர்த்து அமைச்சரே வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்