புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் - ஆளுநரிடம் கிடப்பில் கிடக்கும் கோப்பு
புதுச்சேரி சட்டபேரவை வரும் 22ம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டபேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், 15வது சட்டப் பேரவையின் 4வது கூட்டத்தொடரின் 3வது பகுதி வரும் 22ம் தேதி காலை 9.45 மணிக்கு துவங்கப்படும் என்றும், அன்றைய தினம் அரசு செலவினங்களுக்கான ஒப்புதல் பெறப்படும் எனவும் தெரிவித்தார்... கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்... தொடர்ந்து பேசிய அவர் தற்போதுள்ள சட்டமன்ற கட்டடம் மிகவும் வலுவிழந்துள்ளதால் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கோப்பு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆளுநருக்கு அதில் சில சந்தேகங்கள் உள்ளதால் 5 மாதமாக கோப்பு ஆளுநர் மாளிகையில் உள்ளதாகவும் விரைவில் அனுமதி பெறப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்..