மறைமலை நகரில் வெடித்த போராட்டம்... ஸ்தம்பித்த சாலை - களத்திற்கு விரைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த ரயில் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கிருந்த வீடுகளில் மின்சாரத்தை துண்டிப்பதற்காக அதிகாரிகள் சென்று இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருமார்க்கத்திலும் 2-கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் .
Next Story