பிரதமர் வருகைக்கு போராட்டம்..."ஜனநாயக நாட்டில் இதற்கு கூட உரிமை இல்லையா"...கே.எஸ்.அழகிரி காட்டம்
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் சில பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் உரிமையை மறுக்கிற வகையில், காவல் துறையினர் வரம்பு மீறி கடுமையாக நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு, போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் கட்சியினரை கைது செய்த காவல் துறையினரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Next Story