மக்களே இன்றே கடைசி நாள்.. 5% தள்ளுபடி இதை விட்டால்... - மாநகராட்சி விடுத்த திடீர் எச்சரிக்கை!

x

சொத்து வரி செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துகளை ஜப்தி செய்வது, அபராத வட்டி விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 5 சதவீத தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரையாண்டுக்கான சொத்து வரி மொத்தம் ரூ.850 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கடந்த மாதம் தொடர் விடுமுறை நாட்கள் வந்ததால் தற்போது வரை 290 கோடியே 61 லட்சம் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை இன்றைக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடி சலுகை பெறுமாறு சென்னை மாநாகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தவறும் பட்சத்தில், புதிய தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளின்படி வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் சொத்துகளை ஜப்தி செய்வது, அபராத வட்டி விதிப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்