குடும்பத்திற்குள் சொத்து தகராறு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்

x

தென்காசியில், சொத்து தகராறில் சொந்த அண்ணன் மகனை வெட்டிக் கொன்ற சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த செல்லச்சாமிக்கு சொந்தமான இடத்தில், தனது அண்ணனான வீராசாமி என்பவரின் குடுமபத்தினர் குடிசை வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால், வீட்டை காலி செய்ய சொல்லி இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த சின்னசாமி, அருகில் இருந்து மண்வெட்டியை எடுத்து, தனது அண்ணன் மகனான இளையராஜாவை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த செல்லச்சாமி மற்றும் அவரது சகோதரர் செல்லத்துரையை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்