அரசு துறையில் பதவி உயர்வு - ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு | Chennai High Court

x

தகுதிகாண் பருவத்தில், தேர்வுகளை எதிர்கொண்டால் மட்டுமே பதவி உயர்வு நிரந்தரமாக்கப்படும் என்பதால், அந்த பருவத்தை வெறும் சம்பிரதாயமாக பார்க்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறையில் உதவியாளராக பணிக்கு சேர்ந்து, துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்ற எஸ்.நாகஜோதி என்பவர், தகுதிகாண் பருவத்தில் 9 மாதங்கள் பேறுகால விடுப்பு எடுத்தார். இந்த விடுப்பு காலத்தை பணியில் இருந்த காலமாக கருதாமல் மூப்பு பட்டியல் தயாரித்ததால் தன்னைவிட இளையவர்கள் பதவி உயர்வு பெற்றதாக கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், பேறு கால விடுப்பை பணியில் இருந்ததாக கருத முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தகுதி காண் பருவ காலகட்டத்தில், பல்வேறு தேர்வுகளை எதிர்கொண்டால் மட்டுமே பதவி உயர்வு நிரந்தரமாக்கப்படும் என்பதால், தகுதி காண் பருவ காலத்தை வெறும் சம்பிரதாயமாக பார்க்க முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்