தனியார் நிதி நிறுவனம் முன் முதலீட்டாளர்கள் தர்ணா - நடவடிக்கை எடுத்த போலீஸ்
போச்சம்பள்ளியில் நிதி மோசடி புகாரில் சிக்கிய, தனியார் நிதி நிறுவனத்தின் தலைவர் வனிதாவை கடந்த நவம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் ஜாமினில் வெளிவந்து 80 நாட்களாகியும் முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போச்சம்பள்ளியில் உள்ள அந்த நிதி நிறுவனத்தின் முன்பு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் 5 மணிநேரமாக தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேசுசவார்த்தை நடத்தியும், அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து விட்டு மாலையில் விடுவித்தனர். கைதானவர்களில் ஒருவர் மயக்கம் அடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story