தனியார் பள்ளிகளுக்கு... - ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

கோவையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில், பள்ளியில் காலியாக இடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு கிலோமீட்டர் தூரத்தை தாண்டி இருப்பிடம் இருந்தாலும், மாணவிகளுக்கு சேர்க்கை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இரு மாணவிகளின் சேர்க்கை விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார். மனுதாரர்கள் இருவரும் வரும் 20ம் தேதி பள்ளி நிர்வாகத்தை அணுக உத்தரவிட்டார். இரு மாணவிகள் சேர்க்கையை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்