"தனியார் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை" - செல்வப்பெருந்தகை தகவல்

x

"தனியார் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை" - செல்வப்பெருந்தகை தகவல்

தனியார் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற உள்ளதாக பொது கணக்கு

குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். ஓசூரில் உள்ள டைட்டன் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர்,

தொழிலாளர்களிடம் பணி குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை, தமிழகர்களுக்கு முன்னுரிமை

அளித்து வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என தொழிலதிபர்களிடம் முதலமைச்சர் பேசி வருவதாக தெரிவித்தார். தமிழர்களுக்கு

வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டமன்றத்தில் விரைவில் சட்டம் இயற்ற உள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்