மின்னல் வேகத்தில் அரிசி விலை சென்றதால் உடனடியாக சட்டத்தை அமல்படுத்திய அரசு.. 1 கிலோ அரிசி வெறும் ரூ.29 தான்..!

x

மின்னல் வேகத்தில் அரிசி விலை சென்றதால் உடனடியாக சட்டத்தை அமல்படுத்திய அரசு.. 1 கிலோ அரிசி வெறும் ரூ.29 தான்..!

அரிசி விலை, 2023 பிப்ரவரி அளவை விட 2024

பிப்ரவரியில் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய

அரசின் தரவுகள் கூறுகின்றன.

மொத்த விலை கடந்த ஒரு ஆண்டில் 15.5 சதவீதம்

அதிகரித்துள்ளன.

பருவ மழை குறைபாடுகளினால், 2023-24ல் அரிசி

உற்பத்தி 10.63 கோடி டன்களாக, 2022-23 அளவை

விட 3.79 சதவீதம் குறைந்துள்ளதாக, மத்திய விவசாயத்

துறை அமைச்சகம் வெளியிட்ட முன்கணிப்பு அறிக்கை கூறுகிறது.

அரிசி விலை வெகுவாக அதிகரிக்க இது தான் அடிப்படை

காரணம் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி விலையை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள்

சட்டத்தை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு .

அதன்படி, அரிசி மற்றும் நெல் வியாபாரிகள், ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், தங்கள் வசம் உள்ள அரிசி, நெல் கையிருப்பின் அளவை, மத்திய அரசின் வலைதளத்தில் தரவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தவிர, அடுத்த வாரத்தில் பாரத் அரிசி விற்பனை திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தில், மூன்று மத்திய கூட்டுறவு சங்கங்கள் மூலம், கிலோ 29 ரூபாய் விலையில் அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்