கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே அடியாக படுத்த காய்கறி விலை

x

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் தக்காளி விலை கடுமையாகக் குறைந்து ஒரு கிலோ 5 முதல் 12 ரூபாய் வரை விற்பனையாகிறது... வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது... சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், ஊட்டி கேரட், ஊட்டி பீட்ரூட் 30 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், வரி கத்திரி 10 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், கர்நாடக பீட்ரூட் 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது... அதேபோல், வெண்டை - உஜாலா கத்திரி 15 ரூபாய்க்கும், முருங்கை 25 ரூபாய்க்கும், பட்டாணி 70 ரூபாய்க்கும், இஞ்சி 200 ரூபாய்க்கும், பூண்டு 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எலுமிச்சை விலை 130 ரூபாய் வரையிலும், மாங்காய் விலை 180 ரூபாய் வரையிலும், தேங்காய் விலை 26 ரூபாய் வரையிலும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்