பிரஸ் கிளப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு - கணவர் ஜூட் மனைவிக்கு சிக்கல்
கோவை குண்டு வெடிப்பு வழக்கில், அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டதை கண்டித்து, 2002-ஆம் ஆண்டு பிரஸ் கிளப்பில் சபீர் என்பவர் வெடிகுண்டு வைத்தார். அந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில், சபீர் தப்பிச் சென்று காஷ்மீர் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது பின்னர் தெரியவந்தது. சபீரும், அவருடைய மனைவி பௌசியாவும் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்து வந்தது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. சபீரின் மனைவி பௌசியா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கேரள மாநிலம் வயநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரிடம் சபீர் குறித்து விசாரணை நடத்த கோவை சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Next Story