கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி பெண்..தர்ணா போராட்டம்..

x

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி 5 நாட்களாக கணவர் வீட்டு முன்பு, கர்ப்பிணி பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வேலக்கவுண்டனூரை சேர்ந்த பவித்ரா என்பவர், தனது காதல் கணவர் மோகன்ராஜ் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மோகன்ராஜை சந்திக்க விடாமல் அவருடைய பெற்றோர் தடுப்பதாக கூறி, பவித்ரா 5-ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நடவடிக்கை எடுப்பதில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்