கர்ப்பமான 16 வயது சிறுமி.. "தாய்,தந்தையின் அந்த ஒரு திடீர் முடிவு.." -மருத்துவமனையில் வெளிவந்த தகவல்

x

ஈரோடு மாவட்டத்தில் 16வயது சிறுமியை 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கிய நிலையில், கருகலைப்பு செய்ய முயன்ற, திமுக பேரூராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் படித்து வரும் 16 வயது சிறுமியை, அதே பள்ளியில் படிக்கும் 17 வயது சிறுவன் கர்ப்பமாக்கியுள்ளான். சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதாள் உதவியுடன் சிறுவனின் பெற்றோர் கருகலைப்பு செய்ய முயன்றுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளித்த‌து. இதனிடையே, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேரூராட்சி தலைவர் அமுதாள் மற்றும் சிறுவனின் பெற்றோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்