அதிர்ச்சி கொடுத்த ரிசல்ட்... பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்
நாடாளுமன்றத் தேர்தலில் தனது கணிப்பு தவறாகிவிட்டது என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்கள் வரையில் வெல்லும் என கூறிய கருத்துக்கணிப்புகளை எல்லாம் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கிவிட்டது. அதுபோல், பாஜக மீண்டும் 300 இடங்கள் வரையில் வெல்லும் என்ற தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணிப்பும் தவறாகிவிட்டது. ஏற்கனவே தங்கள் கணிப்பு தவறாகிவிட்டது என ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு முகமை தலைவர் பிரதீப் குப்தா தொலைக்காட்சியிலே அழுது இருந்தார். இந்த சூழலில் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கணிப்பு தவறாகிவிட்டது பிரசாந்த் கிஷோரும் ஒப்புக்கொண்டுள்ளார். எண்களின் அடிப்படையிலான தங்கள் கணிப்பு 20 சதவீதம் தவறாகிவிட்டது என கூறியிருக்கும் பிரசாந்த், பாஜக வாக்கு வங்கியை குறிப்பிட்டு, தொகுதி எண்ணிக்கையை தாண்டி தாங்கள் சொன்னது எதுவும் தவறாகவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கணிப்பு எண்ணிக்கை தவறாகிவிட்டது என கூறியிருக்கும் பிரசாந்த், இனி எண்ணிக்கை குறித்து பேசப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.