லீக்காகி நாட்டையே உலுக்கிய ஆபாச வீடியோ... இரவோடு இரவாக பெங்களூரு ஏர்போர்ட்டில் தட்டி தூக்கிய போலீஸ்
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி வெளிநாடு தப்பிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு திரும்பிய நிலை யில், விமான நிலையத்தில் வைத்து சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோ எடுத்து வைத்திருந்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஏப்ரல் 26-ம் தேதி ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் அன்றே பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறினார். ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அவரது தாத்தா தேவகவுடாவின் எச்சரிக்கைக்கு பிறகு மே 31-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன் என பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார். ஜெர்மனியின் முனிச் நகரில் தங்கியிருந்த ரேவண்ணா லுஃப்தான்ஸா விமானம் மூலம் அதிகாலையில் பெங்களூரு கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். 34 நாட்களுக்குப் பிறகு நள்ளிரவில்
நாடு திரும்பிய அவரை, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் கைது செய்தனர்.