ECR அருகே தொடர் அதிர்ச்சி.. நேரில் வந்த MLA... உடனே மாறிய காட்சி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் தொடரும் மின்வெட்டை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பின்னர் மக்களின் குறைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மின்வாரிய அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story