சொந்த கட்சி MLAவுக்கு எதிராக போஸ்டர் - ராமநாதபுரத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மாவட்டச் செயலாளருமான காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கத்திற்கு எதிராக, முதுகுளத்தூரை சேர்ந்த தி.மு.க மாணவரணி அமைப்பாளர் கருப்பசாமி பாண்டியன், இரு தினங்களுக்குமுன் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார். இதையடுத்து அவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷாவுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் கமலக்கண்ணன், மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்