பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூமின் 25- வது புதிய கிளை திறப்பு | Poorvika
சென்னை அம்பத்தூரில் பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூமின் 25 -வது புதிய கிளை திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பூர்விகாவின் ஷோரூம்கள் இயங்கி வரும் நிலையில் சென்னை அம்பத்தூர் சிடி எச் சாலையில் பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூமின் 25-வது புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் பூர்விகாவின் நிறுவனர் யுவராஜ் , கன்னி யுவராஜ் , அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கிளையில் டிவி, பிரிட்ஜ் , ஏசி வாஷிங் மெஷின் , மொபைல் போன் , லேப்டாப் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் விற்பனையாகின்றன. முதல் நாளில் டிவி வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாகவும் 5000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.