சிறுமியின் நினைவாக பல தலைமுறைகளாக பொங்கல் வைக்கும் கிராமத்தினர்...பாரம்பரிய போர்க்காய் விளையாடிய இளைஞர்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் செரியலூர் இனாம் கிராமத்தில், பல நூறு ஆண்டுகளுக்கு முன் அம்மை நோய் பாதிப்பால் உயிரிழந்த சிறுமிக்கு, பல தலைமுறைகளாக கிராமமக்கள் கூட்டாக பொங்கல் வைத்து படையிலிடுவது வழக்கம். அந்தவகையில், இன்று வீடுகளில் பொங்கல் வைத்த கிராம மக்கள், சிறுமியின் நினைவாக கூட்டாக பொங்கல் பொருட்களை வைத்து குளக்கரையில் படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, புதுக்கோட்டை பகுதியில் விளையாடப்படும் பாரம்பரிய போர்க்காய் அடிக்கும் விளையாட்டை இளைஞர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்