நேத்து அறிவிச்ச `பொங்கல் பரிசு' டிரெய்லர் தான்.. இன்னொரு `நட்சத்திர' அறிவிப்பு இருக்காம்.. செம சர்ப்ரைஸ் காத்திருக்கு மக்களே..!

x

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கிய இடம்பிடிப்பது பொங்கல் விழா.... இந்த கொண்டாட்ட காலத்தை கூடுதல் சிறப்பாக்குவது அரசின் பொங்கல் பரிசு என்று சொல்லலாம்..... இந்த ஆண்டும் அதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அரசு.

பொங்கல் பரிசு தொகுப்பிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. மொத்தமாக தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது...

ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படும். ஒரு முழுக்கரும்பை வெட்டுக்கூலியுடன் சேர்த்து 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய உள்ளனர்

1 கிலோ பச்சரிசியை 35 ரூபாய் 20 காசுக்கும், ஒரு கிலோ சர்க்கரையை 5 சதவித ஜிஎஸ்டியுடன் சேர்த்து 40 ரூபாய் 61 காசுக்கு வாங்குகின்றனர். ஆக மொத்தம், பொங்கல் தொகுப்பு வழங்க 238.92 கோடி செலவீனம் ஏற்படும் என கணக்கிட்டுள்ளனர். இந்த பொங்கல் தொகுப்பானது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெரும் பொருட்களுக்கான அறிவிப்பு வெளியானாலும், நட்சத்திர அறிவிப்பான ஆயிரம் ரூபாய் பரிசு பற்றிய அறிவிப்பு அந்த அரசாணையில் இல்லை. இருந்தாலும் வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்திற்கான அறிவிப்பை முதலமைச்சரே நேரடியாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்பட்டது. இந்தாண்டும் அதே போன்று பொங்கல் பரிசு செய்தி வெளியாகியுள்ள நிலையில், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்