"வேணும்னே பண்றீயா?" வலி தாங்காமல் கதறி துடித்த மாணவன்.. பொள்ளாச்சியில் தமிழாசிரியர் செய்த கொடூரம்

x

புறநானூறுக்கு பதிலாக வேறொரு செய்யுளை எழுதிய மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில், மாணவனை அடித்த குற்றத்திற்காக தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்..

12 ஆம் வகுப்பு மாணவரை மார்பிலும், வயிற்றிலும் தாக்கியதாக புகார் அரசு பொதுத்தேர்வு எழுத இருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவரை.... தமிழ் ஆசிரியரான சுரேஷ், புறநானூறு செய்யுளை புத்தகத்தை பார்த்து நோட்டில் எழுத சொன்னதாக தெரிகிறது...

புறநானூறு செய்யுளை புத்தகத்தை பார்த்து எழுத சொன்ன ஆசிரியர் ஆசிரியர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் வேறொரு செய்யுளை மாணவர் நோட்டில் எழுதியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், கோபத்தில் வேண்டுமென்றே இவ்வாறு எழுதுகிறாயா? என கேட்டு சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது...

தவறுதலாக வேறொரு செய்யுளை மாணவர் எழுதியதால் கோபம் மாணவனின் மார்பிலும், அடி வயிற்றிலும் ஆசிரியர் அடித்ததாக கூறப்படும் நிலையில், வலி தாங்க முடியாமல் கதறிய மாணவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்...

இந்நிலையில், மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளியின் தமிழ் ஆசிரியர் சுரேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்