வானத்தில் பறந்த யானை... ஆச்சரியமுடன் மேலே பார்த்த மக்கள்
பொள்ளாச்சி அருகே நடைபெற்றுவரும் சர்வதேச பலூன் திருவிழா 2வது நாளாக களைகட்டியது. கோவை மாவட்டம் ஆச்சிபட்டியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 9வது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 10 வெப்ப காற்று பலூன்கள் பங்கேற்றுள்ளன. இந்த பலூன்களில் பறக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும், 100 அடி உயரம் வரை செல்ல ஆயிரத்து 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனிடையே யானை, தவளை, மிக்கி மவுஸ் என பல்வேறு வடிவங்கள் கொண்ட ராட்சத பலூன்கள் வானில் பறந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன...
Next Story