இன்ஸ்பெக்டர் சைன்-ஐ போட்டு அரங்கேற்றப்பட்ட மெகா மோசடி.. பெண் உடந்தை

x

காவல் நிலைய ஆய்வாளரின் கையெழுத்து மற்றும் முத்திரையை போலியாக தயார் செய்து, தொலைந்து போன சொத்து பத்திரங்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி காவல்நிலைய ஆய்வாளரின் பெயரில் அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த மோசடி குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தனியார் பத்திர அலுவலகத்தில் பணியாற்றும் லட்சுமணன், இடைத்தரகர் மூர்த்தி மற்றும் இடலாகுடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தராக பணியாற்றும் பால் தங்கம் என்ற பெண் என மூவரை பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், இதில் தொடர்புடைய முக்கிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்