போலீசே இப்படி செய்யலாமா? முதியவரின் டவுசரை கூட விடாமல்... தீயாய் பரவும் வீடியோ
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் சில்லறை மது விற்பனையை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குறிச்சியில் நடைபெற்று வரும் மதுபாரில் சோதனை செய்வதற்காக மாவட்ட மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்களை சோதனை என்ற பெயரில் விரட்டிய அவர்கள், மது வாங்க வந்த முதியவர் ஒருவரது சட்டை, லுங்கி ஆகியவற்றை சோதனை செய்தனர். அவரது டவுசர் பையை சோதனை செய்த காவலர் ஜேம்ஸ், அதில் இருந்த 400 ரூபாயை விடாமல் எடுத்து கொண்டு முதியவரை விரட்டிவிட்டார்.
Next Story