த*கொலைக்கு முயன்ற காவல் உதவி ஆய்வாளர் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

x

தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர், பசுபதி. ஐம்பத்தைந்து வயதாகும் இவர், வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கு காரணம், பணிச்சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்கிற கோணத்தில், வழக்கு பதிந்து சுரண்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்